Thursday, April 29, 2010

என் இனிய பொன் நிலாவே



நீ பேசி முடித்தபின்னும்
நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன் உன்னிடம்
இரவுகளின் வெளிச்சத்தில் மூழ்கி புரண்டு கொண்டிருந்தேன்
அடித்த மூன்று லார்ஜ்களும் பேச தொடங்கும்
முன்பே காணாமல் போயிருந்தன
எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை
கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?

இனி வேலை வேலை என அலுவல்கள்
உன் நினைவுகளை விழுங்கி செல்லும்
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்

இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?

எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!

Sunday, April 25, 2010

இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்




இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்
இயந்திரத்தனமாய் வாழ்க்கை மாறுகையில்
கவிதை மறைகிறது வேறுமனம் வெறுமையாய்
சில்லரைகளின் முன் அய்யராவது ஆச்சாரியாவது
அபஸ்வரங்கள் மட்டுமல்ல கவிமனமும் காணாமல்தான் போகிறது
அதை உடைத்து வந்து உட்கார்ந்தாலும் வாழவின்
ஆதாரதேவைகள் அடித்து ஓடவைக்கிறது
இறைவா! அடுத்த ஜென்மத்திலாவது ஆரம்பத்திலேயே
எல்லாவற்றையும் கொடுத்துவிடு
சொகுசாய் உட்கார்ந்துக்கொண்டு
ஏழைகளை பற்றியும் ஏகாதிபத்தியத்தையும்
Atleast மாடியில் வடாம் போட்டதையும்
சியல்லோ காரை விற்றுவிட்டதையும்
பற்றியாவது எழுதி தொலைக்கிறேன்


காதலியும் மனைவியும்
பொய் சொன்னேன் நம்பினாள்
ஒருநாள் உண்மையை சொன்னேன்..
’ஏய்! நீ பொய் சொல்ற’ என்றாள் காதலி

செத்து தொலைக்கிறேன் என்றேன்
’மொதல்ல இன்சுரன்ஸ் போடு’ என்றாள் மனைவி

காதலியையும் மனைவியையும் சமாளிக்க
இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்.


ரிலாக்ஸ் ப்ளிஸ்
இராகவேந்திரர் ஷிரிடி ரமணர்
இப்ப ஜக்கி - யாரை வேண்டினால்?
துரத்தி வரும் இந்த தெரு நாயிடமிருந்து தப்பிப்பது!

தெளிவு என்பது
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?